சமூக குழந்தை நல மருத்துவ துறை சேவை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்பம்
- TH-Batticaloa
- Nov 24, 2022
- 1 min read

சிறு குழந்தைகளின் நரம்பியல் அபிவிருத்தி தொடர்பான பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றினால் வரும் பாதிப்புகளை வரும் முன்பே தவிர்க்கும் நோக்குடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சமூக குழந்தை நலமருத்துவ துறை சேவை இன்று (17.11.2022) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr.திருமதி. கலாரஞ்சனி கணேசலிங்கம் அவர்களின் தலைமையில்ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறுவர் வைத்திய நிபுணர்கள் ,உளநல மருத்துவ நிபுணர்கள், சேவைமையத்தின்பல்துறைஆளணிக்குழுவினர்என்போர்பங்குபற்றினர்.
கிழக்கு மாகாணத்தின் முதலாவது சமூக குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் பிரார்த்தனா கமலநாதன் அவர்களின் பங்களிப்புடன், சிறு குழந்தைகளுக்கான விஷேட கிளினிக் இன்று (17.11.2022) முதல் எமது வைத்தியசாலையில் இடம்பெறும்.




Comments