மார்பகப் புற்றுநோய்
- TH-Batticaloa
- Feb 8, 2019
- 1 min read

புற்றுநோய் என்றால் என்ன?
மனித உடலின் அடிப்படை மூலக்கூறான கலம், சாதாரண பிரிகைப் பொறிமுறையை விடுத்து, அசாதாரணமானதும், ஒழுங்கற்றதும், நோக்கமில்லாததுமான கலப் பிரிகைக்கு உட்படும் கலப்பிரிகைப் பொறிமுறையே புற்றுநோய் எனப்படுகின்றது.
மார்பகப் புற்றுநோய்.
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்.
சூலகப் புற்றுநோய்.
ஆண்களில் அதிகளவில்,
வாய்ப் புற்றுநோய்.
சுவாசப்பைப் புற்றுநோய்.
களப் புற்றுநோய் என்பன காணப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 2500 புதிய மார்பகப்புற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றார்கள். இவர்களில் 2 வீதமானவர்கள் ஆண் நோயாளர்களாகும்.
மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன?
மார்பக பால் சுரப்புக்கலங்கள் அல்லது பாலைக் கடத்தும் கான் கலங்களில் ஏற்படும் அசாதாரணமான கலப்பிரிவு தொடர்பான கட்டிகளே மார்பகப் புற்றுநோய் எனப்படுகின்றது.
மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளவர் யார்?
மார்பகப் புற்றுநோய் கொண்ட குடும்ப வரலாறு (தாய் அல்லது சகோதரி).
தாய்மைப் பேறடையாதவர்கள்.
முதிர் வயதில் கர்ப்பம் தரித்தவர்கள்.
மன உளைச்சலுக்குள்ளானவர்கள்.
மாதவிடாய் நின்றபின் அதிகளவு உடல் நிறை கூடியவர்கள்.
மிக நீண்டகாலத்துக்கு ஈஸ்ரோஜன் தூண்டலுக்கு உட்பட்டவர்கள்.
மிக இளவயதில் பூப்படைந்தவர்கள்.
பிந்திய வயதில் மாதவிடாய் நின்றவர்கள்.
வைத்திய ஆலோசனையின்றி மிக நீண்ட காலத்திற்கு ஈஸ்ரஜன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளைப் பாவித்தவர்கள்.
மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமா மார்பகப் புற்றுநோய் ஏற்படும்?
இல்லை, மார்பகப் புற்றுநோயானது, மார்பகப் புற்றுநோய் வர அதிக ஆபத்துக் காரணிகள் இல்லாதவர்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளவர்களிலும் மார்பகப் புற்றுநோய் தோன்ற வாய்ப்பு இல்லாதுள்ளது.
மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் எவை?
அண்மைக்காலங்களில் மார்பக அளவுகளில் மாறுபாடு காணப்படல்.
மார்பகத்தில் கட்டி அல்லது வீக்கம்.
மார்பகத்தில் உட்குழிவு தோன்றல்.
மார்பகத்தின் தோல், தோடம்பழத்தின தோலினை ஒத்த தோற்றத்திற்கு மாற்றமடைதல்.
முலைக்காம்பினூடாக திரவம் வெளியேறல்.
முலைக்காம்பு உள்வாங்கப்படல்.
முலைக்காம்பின் தோற்றத்தில் மாற்றம்.
மார்பகத்தில் வலி ஏற்படல்.
மேலதிக தகவல்களுக்கு.....
http://www.nccp.health.gov.lk/images/PDF_FILES/TamilInnerPage.pdf
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்
சுகாதார,போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு
Comments