மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்வையிழந்த 130 பேருக்கான கண்வெண்புரை சத்திர சிகிச்சை
- TH-Batticaloa
- Jan 26, 2019
- 1 min read
Updated: Jan 31, 2019

சுகாதார அமைச்சின் அனுமதியுடன் பார்வையிழந்த 130 பேருக்கான கண்வெண்புரை சத்திர சிகிச்சை ஜனவரி 24 மற்றும் 25 திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதற்கான அனுசரணையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நண்பர்கள் அமைப்பின் பிரித்தானியா கிளை வழங்கியிருந்தது.
இச்சத்திர சிகிச்சை நடைபெற்றதை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி.கலாரஞ்சனி கணேசலிங்கம் அத்துடன் போதனா வைத்தியசாலையின் நண்பர்கள் அமைப்பின் பிரித்தானியா கிளையிலிருந்து வருகை தந்த அக் கிளையின் அங்கத்தினர் இச் சிகிச்சை செய்தோரை பார்வையிட்டனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி.கலாரஞ்சனி கணேசலிங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம், வாகரை, செங்கலடி, நரிப்புல் தோட்டம் போன்ற கிராமங்களில் இருந்து வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பார்வையிழந்த 130 பேருக்கான கண்வெண்புரை சத்திர சிகிச்சை செய்யப்பட்டது என தெரிவித்தார்.
இவ்விடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் இச் சத்திரை சிகிச்சைக்கு உதவிய அமைப்புக்கும் மற்றும் இச் சத்திர சிகிச்சை மேற்கொண்ட கண் சத்திரை சிகிச்சை நிபுணர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

இச் சத்திர சிகிச்சையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கண் சத்திரை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்.வர்ண விஜயசிறிவர்த்தன, டாக்டர்.யசோதா ரமேஸ் மற்றும் ஏனைய வைத்தியசாலையில் இருந்து வருகை தந்த டாக்டர். பிறேம் ஆனந்தா, டாக்டர்.ஜெயகாந்த் கமலசிங்கம், டாக்டர்.சிறிகரனாந்தன், டாக்டர்.சகானா பத்திரன இவர்களுடன் போதனா வைத்தியசாலையின் நண்பர்கள் அமைப்பின் பிரித்தானியா கிளையிலிருந்து வருகை தந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர்களான திருமதி.சாந்தி திவாகரன் மற்றும் திரு.எம்.லோகேந்திரன ஆகியோர் மேற்கொண்டனர்.
Commenti