பொது அறிவித்தல்
- TH-Batticaloa
- Mar 20, 2020
- 1 min read

கிழக்கு மாகாண மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான கோவிட் 19 விசேட சிகிச்சை நிலையம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் நபர்கள் முதலில் 0766992261 என்கின்ற விசேட தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு முதற்கண் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள். உங்களிடமிருந்து சில முக்கிய தகவல்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட விசேட நிபுணர்கள் குழுவுடன் ஆலோசிக்கப்பட்ட பின்னர் உங்களுக்கான பொருத்தமான சிகிச்சை முறை பற்றி உங்களுக்கு அறிவுறுத்தப்படும். அதன் பிரகாரம் வீட்டுத்தனிமைப்படுத்தலில் உங்களை வைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படின் பொதுச்சுகாதாரத் துறையினருக்கு அறிவிக்கப்பட்டு ஆவனசெய்யப்படும். வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டியேற்படின் எவ்வாறு அனுமதிப்பது என்பது தொடர்பில் நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள்.
நன்றி!
கோவிட் 19 விசேட செயலணி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள கோவிட் 19 விசேட சிகிச்சை நிலையத்திற்கான பாதையை கீழ் உள்ள வீடியோ மூலம் அறியலாம்
Comments