top of page

வைத்தியசாலை சிற்றூழியர் நியமனம் தொடர்பாக பரவும் போலிச்செய்தி

  • Writer: TH-Batticaloa
    TH-Batticaloa
  • Sep 4, 2019
  • 1 min read

மட்டு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர் பதவிக்கு நியமனம் பெற்றுத்தருவதாக கூறி, மட்டக்களப்பின் சில பகுதிகளில் (குறிப்பாக ஆரையம்பதி, நாவற்குடா) அப்பாவி பொதுமக்களிடமிருந்து கையூட்டாக பணமும் நகைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பாகவும், இந்த மோசடி நடவடிக்கை மூலம் வைத்தியசாலை நிர்வாகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. வைத்தியசாலை ஊழியர் நியமனம் எதுவும் வைத்தியசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதையும் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு இது தொடர்பில் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதையும் இத்தால் பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்ளுகிறோம். இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினால் திணைக்கள ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறான நிதி மோசடியாளர்கள் தொடர்பில் ஏமாறாமல் விழிப்புடன் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களை மிகவும் வினயமாக கேட்டுக்கொள்ளுகிறோம்.


நிர்வாகம்

போதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு


Comments


bottom of page