மட்டு. கொரோனா சிகிச்சை நிலையத்தை மூடிவிடுங்கள் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது
- TH-Batticaloa
- Mar 19, 2020
- 1 min read

“மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தை மூடிவிடுங்கள் என்று பிரதமருக்கு வைத்தியசாலையின் வைத்தியர் குழுவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” எனும் செய்தி 18.03.2020 அன்று வீரகேசரி நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இச் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். மட்டக்களப்பு கொரோனா சிகிச்சை நிலையத்தை மூடுமாறு எச்சந்தர்ப்பத்திலும் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்படவில்லை. இச் செய்திக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் குழுவினருக்கும் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் எந்தவித தொடர்புமில்லை.
நிர்வாகம்
போதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு

Comments