top of page

முக்கிய அறிவித்தல்

  • Writer: TH-Batticaloa
    TH-Batticaloa
  • May 9, 2019
  • 1 min read

எமது வைத்தியசாலையின் பாதுகாப்பு நோக்கம் கருதி வைத்தியசாலையில் பின்வரும் நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


1. வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளரை பார்வையிட ஒரு தடவையில் இரு (02) பார்வையாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.


2. வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடும் நேரமானது பின்வருமாறு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.


               • காலை 6.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை


               • மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை

                 (ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் 11.30 மணி தொடக்கம் 1.00 மணி வரை)


              • மாலை 4.30 மணி தொடக்கம் 6.00 மணி வரை

                 (ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் 4.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை)


குறித்த நேரத்தின் போது மாத்திரமே பார்வையாளர்கள் வைத்தியசாலை வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவர்.


3. வைத்தியசாலை சேவையினை பெற்றுக்கொள்ள வைத்தியசாலை வளாகத்தினுள் நுழையும் அனைவரும் தங்களது ஆளடையாளத்தினை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை தம்முடன் வைத்திருப்பது கட்டாயமானதாகும்.


4. வைத்தியசாலை நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்படாத எந்த வாகனமும் வைத்தியசாலை வளாகத்தினுள் உள்நுழைய அல்லது தரித்து நிற்க அனுமதிக்கப்படமாட்டாது.


5. விடுதிகள் மற்றும் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு வைத்திய சேவையினை பெற்று வெளியேறும் நோயாளர்கள் தங்களுக்கான வாகன போக்குவரத்து வசதியினை வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் (Accident & Emergency Care Unit ) நுழைவாயிலில் ஏற்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


அதன் பொருட்டு குறித்த நோயாளர்கள் (தேவை ஏற்படின்) வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு வரை வைத்தியசாலை ஊழியர்களால் அழைத்துவந்து விடப்படுவர்.


6. வைத்தியசாலை வளாகத்தினுள் உள்நுழையும் போது தேவையற்ற பொருட்களை கொண்டுவருவதனை இயலுமானவரை தவிர்த்துக்கொள்ளவும்.


மேற்படி நடவடிக்கைகள் அனைத்தும் நமது பாதுகாப்பின் நிமிர்த்தமே செயற்படுத்தப்படுகின்றது என்பதனை கருத்திற் கொண்டு தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


"மேற்படி நடவடிக்கைகளின்போது ஏற்படும் அசௌகரியங்களிற்கு மனம் வருந்துகின்றோம்"


-- வைத்தியசாலை நிர்வாகம் --


תגובות


bottom of page