போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாட்டுக்கான சித்திரை உறுதியுரை நிகழ்வு
- TH-Batticaloa
- Apr 3, 2019
- 1 min read
Updated: Apr 4, 2019

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிலும், நேரடிக் கண்காணிப்பிலும் செயற்படுத்தப்படுகின்ற “போதையிலிருந்து விடுபட்ட நாடு” எனும் தொனிப்பொருளில் சித்திரை உறுதியுரை எடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.திருமதி.க.கணேசலிங்கம் தலைமையில் இன்று பதன்கிழமை (03.04.2019 ) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர். Dr.திருமதி.த.சசிகுமார் தேசியகொடியினை ஏற்றி ஆரம்பித்து வைத்த பின் தேசியகீதம் இசைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாட்டுக்கான சித்திரை உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.

எமது நாட்டின் பிள்ளைகளின் எதிர்கால பாதுகாப்பை இருள்மயப்படுத்தியும் முழு மொத்த மக்களின் வாழ்வை நெருக்கடிக்குட்படுத்தியுள்ள இப் போதைப்பொருள் பாவனையை நிறுத்தி, எதிர்கால சந்ததிக்கு போதையிலிருந்து விடுப்ட்ட நாட்டினை உரிமையாக வழங்குதல் சார்பில் போதைப்பொருட்கள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக நாம் போதைப்பொருள் பாவனையை தவிர்த்துக்கொள்வோம் என போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.




Comments