சிறப்புத் தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான பைஸர் தடுப்பூசி;
- TH-Batticaloa
- Oct 2, 2021
- 1 min read

கொரோனாத் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பு தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 04.10.2021 திங்கட்கிழமை முதற்கட்டமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் திருமதி.க.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இத்தேவையுடைய 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களை, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்குரிய கிளினிக் புத்தகம் மற்றும் ஏனைய ஆவணங்களுடன் வந்து சிகிச்சை வழங்கும் குழந்தைநல மருத்துவ நிபுணர் அல்லது ஏனைய சிறப்பு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளை பெற்று தங்களது பிள்ளைகளுக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.
பின்வரும் நோய்நிலமையுள்ள சிறுவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டு நிலை.
வேறு நோய் நிலமைகளால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புக் குறைபாடு (இரத்தப் புற்றுநோய் மற்றும் ஏனைய புற்றுநோய்களுக்காக சிகிச்சை பெறுபவர்கள் உட்பட).
குருதியுடன் தொடர்புடைய நோய் நிலமைகள்.
அகச்சுரப்புக்கள் தொடர்பான நோய் நிலமைகள்.
நாட்பட்ட நரம்பியல் குறைபாடுகள்.
பிறப்பில் ஏற்பட்ட மரபணு குறைபாடு உள்ளவர்கள்.
வேறு ஏதாவது மரபணு, அனுசேப அசாதாரண நிலமையுடையவர்கள்.
நாட்பட்ட இதய நோய் நிலமைகள்.
நாட்பட்ட சுவாச நோய் நிலமைகள்.
நாட்பட்ட சிறுநீரக தொகுதியுடன் தொடர்புடைய நோய் நிலை.
நாட்பட்ட உணவுக்கால்வாய் மற்றும் ஈரல் தொடர்பான நோய் நிலமைகள்.
நாட்பட்ட மூட்டுவாத நோய் நிலமைகள்.
நாட்பட்ட உளநல பிரச்சினைகள் உடையவர்கள்.
வேறு ஏதாவது குறிப்பிடப்பட்ட நோய் நிலைமைகளுக்காக குழந்தைநல மருத்துவ நிபுணர் அல்லது பொது வைத்திய நிபுணரால் தடுப்பூசிக்காக பரிந்துரைக்கப்படுபவர்கள்.
இங்கு குறிப்பிட்ட நிலமையுடைய 12 தொடக்கம் 19 வயதினருடையோர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்க்காகமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர மற்றும் விபத்துப் பிரிவில் பிரத்தியகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரிவுக்கு சென்று 12 தொடக்கம் 19 வயதினருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் அவர்களது பிள்ளையின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்து, தமது பிள்ளைகளுக்கான தடுப்பூசினை அங்குள்ள வைத்திய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக இப் பிரிவு காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை திறந்திருக்கும்.
- வைத்தியசாலை நிர்வாகம் -
Comments