மட்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு நோயாளர்களுக்கு ஆலோசனைக்கு விசேட தொலைபேசி சேவை
- TH-Batticaloa
- Apr 21, 2020
- 1 min read

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தடுக்கும் பொருட்டு தொலைபேசியினூடாக ஆலோசனை வழங்கும் சேவையை அறிமுப்படுத்தியுள்ளது.
நோயாளர்கள் இச்சேவையினை பெறுவதற்கு வார நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை 0707354354 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். அத்துடன் இவ் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தமிழ்மொழில் ஆலோசனையை பெற இலக்கம் 2 யையும் சிங்களமொழிக்கு இலக்கம் 1 யையும் அழுத்தி பெற முடியும். மேலும் கிழக்கு மாகாணத்திற்கு இலக்கம் 6 மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 0 னையும் அழுத்தி உங்களது புற்றுநோய் தொடர்பான ஆலோசனைகளை பெற முடியும் என புற்றுநோய் வைத்திய நிபுணர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.. இச்சேவையானது நாட்டில் காணப்படும் அசாதாரண நிலைமை சீராகும்வரை இடம்பெறும்.
நிர்வாகம்
போதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு
Opmerkingen