top of page

நட்பு இல்லம்

  • Writer: TH-Batticaloa
    TH-Batticaloa
  • Mar 18, 2019
  • 1 min read

நட்பு இல்லம் என்பது 'வளமான தேசத்துக்காக மகிழ்வான குடும்பங்களை உருவாக்கிட ஒன்றிணைவோம்' என்ற உயரிய நோக்கத்தை மையமாக கொண்டு குடும்பங்களின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்குமாக கணவன், மனைவி,  பிள்ளைகள் ஆகிய அனைவரிடத்திலும் இலவச சேவையை வழங்கும் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு சேவை நிறுவனமாகும்.


இவ் நட்பு இல்லமானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு சேவைப் பிரிவாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ், மன நல ஆலோசகர்களின் வழி நடத்தலில் செயற்ப்பட்டுக்கொண்டிருக்கிறது.


நட்பு இல்லத்தால் வழங்கப்படும் சேவைகள்

  • சந்தோசமான, புரிந்துணர்வுமிக்க வாழ்க்கைக்கு ஆலோசனை வழங்குதல்.

  • புகைத்தல், மதுப் பழக்கத்திற்கு உள்ளாக்கி சீரழிக்கப்பட்டு அல்லது சீரழிவுக்கு உள்ளாகும் நிலையில் இருப்பவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி சிகிச்சை பெறுவதற்கு வழிகாட்டல்.

  • ஏதாவது குடும்பப் பிரச்சனைகளால் (கணவன்-மனைவி, ஏனைய உறவுகள்) நீங்கள் அல்லது உங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டு அல்லது துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பின் அப் பிரச்சனைகளை ஆரோக்கியமாக தீர்த்து வைக்கவும் மற்றும் அப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள், சிகிச்சை வழங்குதல்.

  • குடும்பப் பிரச்சனைகள் காரணமாக ஏற்படும் குழந்தைகளின் உளவியல் தொடர்பான பிரச்சனைகள் ஆராயப்பட்டு ஆலோசனைகள் வழங்குவதுடன, தேவைப்படின் சிறுவர் ஆதரவு சிகிச்சை முறைகளை பெறுவதற்கு ஆலோசனை வழங்குதல்.

இச் சேவையானது வார நாடகளில் முற்பகல் 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணி வரையும் மற்றும் சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் முற்பகல் 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரையும் இடம்பெறும்.


நட்பு இல்லத்தின் சேவையினை நாடி வரும் தங்களின் இரகசியங்கள் பாதுகாக்கப்படும். உங்களது பிரச்சனைகள் ஆரோக்கியமான வழியில் தீர்ப்பதற்கான ஆற்றுப்படுத்தலும். ஊக்கமும் வழங்கப்பட்டு உங்களது மகிழ்வான வாழ்விற்கு உதவிடவே நட்பு இல்லம் பணியாற்றுகிறது.


தொடர்புகளுக்கு:

நட்பு இல்லம்

போதனா வைத்தியசாலை

மட்டக்களப்பு

தொலைபேசி : 0653647685

Comments


bottom of page